மூக்கைத் துளைக்கும் முருங்கைப்பூ வடை - எப்படி செய்வது?
how to make murungai poo vadai
முருங்கை கீரையில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இதனை சாம்பார், பொரியல் செய்து தான் சாப்பிட்டிருப்போம். ஆனால், முதன் முறையாக முருங்கைபூவில் வடை செய்வது எப்படி என்றுக் காண்போம்.
தேவையான பொருட்கள்:
முருங்கை பூ
கடலைபருப்பு
துவரம் பருப்பு
உளுந்தம் பருப்பு
பெரிய வெங்காயம்
பச்சை மிளகாய்
உப்பு
நல்லெண்ணெய்
செய்முறை:
முதலில் கடலை பருப்பு மற்றும் துவரம்பருப்பு இரண்டையும் நீர் ஊற்றி ஊறவைக்க வேண்டும். நன்கு ஊறிய பின் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த மாவில் முருங்கைப் பூ, வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடிதாக வெட்டி உப்பு சேர்த்து கலந்துகொள்ள வேண்டும்.
பின்னர் அடுப்பில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தயார் செய்து வைத்துள்ள மாவை வடைகளாக தட்டி, பொரித்தெடுக்கவும். அவ்வளவுதான் சுவையான முருங்கைப்போ வடை தயார்.
English Summary
how to make murungai poo vadai