வரி ஏய்ப்பில் ஈடுபட்டால் கிரிமினல் நடவடிக்கை..!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ அன்னபூர்ணா ஹோட்டலில் வரி ஏய்ப்பு நடப்பதாக வணிகவரித் துறைக்கு பல்வேறு புகார்கள் அனுப்பப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு வணிகவரித்துறை சார்பில் நடத்தப்பட்ட விசாரணையில் வரியை எய்ப்பு நடந்தது தெரியவந்தது. இதனால் ஓட்டலுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து ஹோட்டல் உரிமையாளர் சார்பில் தமிழ்நாடு வணிகவரித்துறை நடவடிக்கை எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் "காளான்களைப் போல வரி எய்ப்பு தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. வரி எய்ப்பு செய்யும் நிறுவனங்கள் மீது அபராத தொகை மட்டுமல்லாமல் குற்றவியல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். எனவே தமிழ்நாடு வணிகவரித்துறை சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை செல்லும். எனவே மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்து இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது" என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ChennaiHC order Criminal action can taken if involved in tax evasion


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->