பட்டியலின சாதி சான்றிதழை ஆராய டிஎன்பிஎஸ்சி.,க்கு அதிகாரம் இல்லை.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


பட்டியலினத்தவருக்கு வழங்கப்பட்ட சாதிச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்ய டிஎன்பிஎஸ்சிக்கு அதிகாரம் வரம்பு இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 1996-1997ம் ஆண்டு தமிழக அரசால் நடத்தப்பட்ட டி.என்.பி.எஸ்.சி தேர்வு மூலம் குரூப்-4 தேர்வில் பங்கேற்றி இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சராக பணியாற்றி வந்த கணவரை இழந்த ஜெயமணி என்பவர் கிருத்துவ மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறி பட்டியலினத்தவர் சாதி சான்றிதழ் பெற்றிருந்தார்.

அவர் பணிநியமனம் செய்யப்படும் பொழுது கணவர் பெயரில் வாங்கிய சான்றிதழ் பதில் தந்தையின் பெயரில் வாங்கிய சான்றிதழை சமர்ப்பிக்கும் படி டிஎன்பிஎஸ்சி உத்தரவு பிறப்பித்து இருந்தது.

இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு தனி நீதிபதியின் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணையின் முடிவில் தகுதியான அதிகாரிகள் வழங்கிய சாதி சான்றிதழ் செல்லத்தக்கது என்றும், தந்தை பெயரில் பெற்ற சாதி சான்றிதழ் சமர்ப்பிக்கும் படி உத்தரவிட டி.என்.பி.எஸ்.சிக்கு அதிகார வரம்பு இல்லை எனவும் தீர்ப்பு வழங்கினார்.

இதனை எதிர்த்து டிஎன்பிஎஸ்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் திலகவதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் "பட்டியல் இனத்தவர்கள் சாதிச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை குறித்து ஆய்வு செய்ய மாவட்டம் மற்றும் மாநில அளவிலான குழுக்களுக்கு அதிகாரம் உள்ளது. சான்றிதழ்களின் உண்மைத் தன்மை குறித்து ஆராய டிஎன்பிஎஸ்சிக்கு அதிகார வரம்பு இல்லை. எனவே தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவில் தலையிட மறுத்து டி.என்.பி.எஸ்.சி செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ChennaiHC order TNPSC has no authority to examine caste certificate


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->