தர்மபுரி மாவட்டத்திற்கு அதிரடியான 7 திட்டங்கள் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


ஊரகப் பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்' திட்டத்தைத் தருமபுரி மாவட்டம் பாளையம்புதூரில் இருந்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மேலும் தருமபுரி மாவட்டத்திற்கு 7 அறிவிப்புகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி,

அரூர் பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

₹51 கோடி மதிப்பில் அரூர் அரசு மருத்துவமனை உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

வெண்ணாம்பட்டி சாலையில் ரயில்வே மோம்பாலம் ₹31 கோடியில் மேம்படுத்தப்படும்.

பஞ்சப்பள்ளி, ராஜபாளையம் அணைகட்டுகள் ₹50 கோடி மதிப்பில் புனரமைக்கப்படும்.

அரசநத்தம் பகுதியில் பழங்குடியினர் உற்பத்தி செய்யும் சாமை, ராகி ஆகியவற்றை மதிப்புக்கூட்டு பொருளாக்க கிடங்கு மற்றும் பொதுசெயலாக்க மையம் அமைக்கப்படும்.

தீர்தமலையில் துணை வேளாண்மை விரிவாக்கம் அமைக்கப்படும்.

பளையம்புதூர் அரசு பள்ளியில் பழுதடைந்த நிலையில் 4 வகுப்பறைகள் அதன் பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chief minister MK Stalin announce Dharmapuri new schemes


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->