17 நாட்களுக்குப் பிறகு சென்னை வருகிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.!
chief minister mk stalin come in chennai
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் 27-ம் தேதி இரவு அரசுமுறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். பின்னர் கூகுள் உள்ளிட்ட நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து கடந்த 2-ம் தேதி சிகாகோ சென்ற முதலமைச்சர் அங்கு தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார். மொத்தம் ரூ.7,616 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், தமிழக அரசு மற்றும் அந்த நிறுவனங்களுக்கு இடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது. இதன் மூலம் தமிழகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்கா பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு இன்று சென்னை வருகிறார். இதற்காக கடந்த 12-ந் தேதி சிகாகோ விமான நிலையத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலினை அங்குள்ள தமிழர்கள் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.
அதன் படி துபாய் வழியாக அவர் இன்று சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் இன்று காலை 8.25 மணிக்கு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அரசு சார்பிலும், தி.மு.க. சார்பிலும் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
English Summary
chief minister mk stalin come in chennai