இன்று ஈரோடு செல்கிறார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தின் அனைத்து துறைகள் சார்பில் அரசின் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் தொடக்க விழா, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளை காலை 10 மணிக்கு ஈரோடு சோலாரில் உள்ள புதிய பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது. 

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.952 கோடியே 35 லட்சம் செலவில் முடிவுற்ற 560 பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கிறார். தொடர்ந்து மாவட்டம் முழுவதும் ரூ.141 கோடியே 41 லட்சம் செலவில் புதிய வளர்ச்சி திட்ட பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். 

ஒரே நாளில் ஈரோடு மாவட்டத்துக்கு ரூ.1,377 கோடியே 76 லட்சம் மதிப்பில் நலத்திட்டங்களை வழங்க உள்ளார். இதற்காக அவர் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் கோயம்புத்தூருக்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் மதியம் 12 மணிக்கு ஈரோடு காலிங்கராயன் விருந்தினர் மாளிகைக்கு வந்து சேருகிறார். 

இதையடுத்து மாலை 5 மணிக்கு மேட்டுக்கடை தங்கம் மகாலில் நடைபெறும் தி.மு.க. கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். அங்கிருந்து மாலை 6 மணிக்கு முத்து மகாலில் நடைபெறும் தி.மு.க. நிர்வாகி இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்துகிறார். இரவு 7 மணிக்கு காலிங்கராயன் விருந்தினர் மாளிகைக்கு சென்று ஓய்வு எடுக்கிறார்.

நாளை காலை 10 மணிக்கு காலிங்கராயன் மாளிகையில் இருந்து புறப்பட்டு சோலார் புதிய பஸ் நிலையம் வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று பொதுமக்கள் மத்தியில் பேசுகிறார். விழா முடிந்ததும் கார் மூலம் கோவை விமான நிலையம் சென்று, அங்கிருந்து விமானத்தில் சென்னை திரும்புகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chief minister mk stalin come in erode


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->