விஷப்பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு நிதியுதவி - முதலமைச்சர் அறிவிப்பு.!
chief minister mk stalin compensation announce poison snake bite died girl family
தருமபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் அருகே அலகட்டு கிராமத்தில் விஷப்பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கிட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:- "தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், அலகட்டு மலை கிராமத்தைச் சேர்ந்த ருத்ரப்பா - சிவலிங்கி என்ற தம்பதியரின் மகள் கஸ்தூரி என்பவர் நேற்று அவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் கீரை பறித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விஷப்பாம்பு கடித்ததில், உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
விஷப்பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த சிறுமியின் பெற்றோருக்கு மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என்றுத் தெரிவித்துள்ளார்.
English Summary
chief minister mk stalin compensation announce poison snake bite died girl family