முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை சிங்கப்பூர் பயணம்..!!
chief minister mk stalin going to singapoore
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை சிங்கப்பூர் பயணம்..!!
கடந்த 2021-ம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அப்போது, முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் தொழில் துறையை முன்னெடுத்து செல்வதில் அதிக அக்கறை காட்டி வருகிறார்.
இதற்காக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் குழுவும் அமைக்கப்பட்டது. அவர்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் துபாய், அபுதாபி உள்ளிட்ட நாடுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சென்றது. அப்போது 6 தொழில் நிறுவனங்களுடன் ரூ.6 ஆயிரத்து 100 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் 14,700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், இரண்டு நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொழில் துறை அதிகாரிகளுடன் சிங்கப்பூர் செல்ல இருக்கிறார். அங்கு 24-ந்தேதி நடைபெறும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார். இந்த மாநாட்டில், சிங்கப்பூர் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
மேலும், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு, அங்கிருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். அங்கும் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழ்நாட்டுக்கு தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்க உள்ளார்.
English Summary
chief minister mk stalin going to singapoore