#JustIn || தலைமைச் செயலகத்தை மாற்ற வலுக்கும் கோரிக்கை! அரசின் முடிவு என்ன?
Chief Secretariat staff demanded to change Tamil Chief Secretariat
கடந்த 2011ம் ஆண்டு தமிழ்நாடு முதலமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்ற பிறகு அதற்கு முன்பு கருணாநிதிய ஆட்சியில் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை அரசினர் பன்னோக்கு உயர் மருத்துவமனையாக மாற்றியதோடு பழையபடி கோட்டைக்கு தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தை மாற்றினார்.
அதன்பிறகு 10 ஆண்டுகள் சென்னை கோட்டையில் உள்ள பழைய தலைமைச் செயலகத்தில் முக்கிய செயலாளர்களின் அலுவலகங்கள் அமைச்சர்களின் அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன. இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் தலைமை செயலகத்தை மீண்டும் ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள புதிய தலைமைச் செயலக கட்டிடத்துக்கு மாற்ற வேண்டும் என்று தலைமை செயலக சங்கம் வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில் இன்று "தற்போது உள்ள பழைய தலைமை செயலகத்தில் இட நெருக்கடி பெரிய பிரச்சினையாக உள்ளது. போதிய இடவசதி இல்லாததால் அமைச்சர்கள் துறை ரீதியான கூட்டங்களை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. தலைமைச் செயலக பணியாளர்களின் இடர்பாடுகளை போக்க அரசின் கொள்கை முடிவை அறிவிக்க வேண்டும்" என தலைமைச் செயலக பணியாளர்கள் சங்கம் மீண்டும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
English Summary
Chief Secretariat staff demanded to change Tamil Chief Secretariat