குழந்தை திருமணங்கள் விவகாரம்! உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவு! - Seithipunal
Seithipunal


சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் நடத்தி வைத்ததாக எழுந்த புகாரை அடுத்து நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இது தொடர்பாக தீட்சிதர்கள் மற்றும் சிதம்பரம் நடராஜர் கோயில் செயலாளர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இது கண்டித்து நூற்றுக்கு மேற்பட்ட தீட்சிதர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். சாலை மறியல் தொடர்பாக சிதம்பரம் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்குகள் தொடர்பாக பலரை போலீசார் தேடி வந்த நிலையில் முன்ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கு பதிவு செய்யப்பட்ட 51 பேரில் இருவரது முன் ஜாமின் மாவட்ட நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதனை அடுத்து எந்த வழக்கில் 51 பேர் தேடப்பட்டு வருகின்றனர் என்ற விவரத்துடன் புதிய மனு தாக்கல் செய்யும்படி மனுதாரர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 மேலும் இந்த வழக்கை வரும் நவம்பர் 1ம் தேதி வரை தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இருவரது முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் மற்ற 49 பேரை நவம்பர் 1ம் தேதி வரை கைது செய்யக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Child marriage issue new order issued by the Chennai High Court


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->