தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டம்.. தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை..!!
Christmas day celebration all over Tamil Nadu
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் விதமாக டிசம்பர் மாதம் 25ஆம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கிறிஸ்தவர்களின் இல்லங்கள், ஆலயங்கள் போன்றவை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
சென்னை உட்பட பல முக்கிய நகரங்களில் வீடு, கடை, ஷாப்பிங் மால்களில் கிறிஸ்துவ குடியியல், கண்கலர் அலங்கார தோரணங்கள் அமைக்கப்பட்டு பல இடங்களில் விதவிதமான ஸ்டார் தோரணங்கள் தொங்கவிடப்பட்டுள்ளன. இதேபோன்று உலகப்புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் நல்லிரவில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் இயேசு கிறிஸ்து பிறந்தநாள் செய்தியை வேளாங்கண்ணி ஆலய அதிபர் இருதயராஜ் பல்லாயிரக்கணக்கான முன்னிலையில் வாசித்தார்.
அதேபோன்று சென்னை, புதுச்சேரி, மதுரை, நாகர்கோவில், கன்னியாகுமரி, சேலம், தூத்துக்குடி, கோவை போன்ற நகரங்களிலும் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. தமிழக முழுவதும் உள்ள அனைத்து தேவ ஆலயங்களிலும் சிறப்பு திருப்பலி பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் குடும்பங்களுடன் சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்டனர்.
English Summary
Christmas day celebration all over Tamil Nadu