பரபரப்பு : கோவில் திருவிழாவில் வெடித்த சாதி கலவரம் - இளைஞர்க்கு கத்தி குத்து!
Clash between two sides during temple festival Youth stabbed to death
திருப்பத்தூர் மாவட்டம்: வாணியம்பாடி வி.எஸ்.கே. காலனி பகுதியில் வீடுகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டடுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆவணி மதத்தை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் திருவிழா நடைபெற்று வருகிறது. அந்தவகையில் வாணியம்பாடி வி.எஸ்.கே. காலனி பகுதியில் நேற்று கோவில் திருவிழா நடைபெற்றது. அப்போது காமராஜபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர் மற்றும் வி.எஸ்.கே. காலனி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் நடனமாடிக் கொண்டிருந்தாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த சந்துரு (வயது 19) இளைஞரை கத்தியால் குத்தியுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. படுகாயம் அடைந்த சந்துரு-வை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்து காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு வி.எஸ்.கே. காலனி பகுதிக்குள் புகுந்து அங்கிருந்த ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். பிறகு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோணாமேடு பகுதி அம்பேத்கர் சிலை முன்பு சாலை மறியலில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரப்பரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
மேலும், அதே நேரத்தில் மற்றோரு தரப்பை சேர்ந்த பொதுமக்கள் கச்சேரி ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பு திரண்டு அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தடுக்க திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.
சூப்பிரண்டு எஸ்.பி. ஸ்ரேயா குப்தா இந்த சம்பவம் குறித்து நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். இரு பகுதிகளிலும் பதற்றம் நிலவியதால் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். வி.எஸ்.கே. காலனி பகுதியில் வீடுகள், வாகனங்களை உடைத்து சேதப்படுத்தியதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
English Summary
Clash between two sides during temple festival Youth stabbed to death