நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றார் துப்புரவு பணியாளர் மகள்.! - Seithipunal
Seithipunal


திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி சத்தியமூர்த்தி மேட்டுத்தெரு பகுதியை சேர்ந்தவர் சேகர் - செல்வி தம்பதியினர். இவா்களுடைய மகள் துர்கா. இதில், சேகர் மன்னார்குடி நகராட்சி துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார்.

இதையடுத்து மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை இயற்பியல் பட்டம் பெற்ற துர்காவுக்கும், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த நிர்மல் குமார் என்பவருக்கும் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது.

நிர்மல் குமார், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இதேபோல், கடந்த 2022-ம் ஆண்டு குரூப்-2 தேர்வு எழுதி முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வுகளில் வெற்றி பெற்ற துர்கா இந்த ஆண்டு நடந்த நேர்முகத்தேர்வில் 30-க்கு 30 மதிப்பெண்கள் பெற்று நகராட்சி ஆணையராக தேர்ச்சி பெற்றார். 

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நகராட்சி ஆணையராக அவருக்கு பணி நியமன ஆணையை சமீபத்தில் வழங்கினார். இதையடுத்து துர்கா 3 மாத பயிற்சிக்கு பிறகு நேற்று திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையராக பொறுப்பேற்றார். 

அவருக்கு நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதற்கு முன்னதாக, திருவாரூா் மாவட்ட ஆட்சியர் தி. சாருஸ்ரீயை அவரது அலுவலகத்தில் சந்தித்த துா்கா அவரிடம் வாழ்த்துப் பெற்றாா்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cleaning employee daughter appointed muncipal commissioner


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->