அரசு ஊழியர்களுக்கு வந்த குட் நியூஸ் - அதிரடியாக உயர்த்தப்பட்ட அகவிலைப்படி.! - Seithipunal
Seithipunal


அரசு ஊழியர்களுக்கு பொதுவாக இரண்டு முறை அதாவது ஜனவரி மற்றும் ஜுலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படும். இதில் இரண்டாம் அகவிலைப்படியான ஜுலை மாதம் உயர்த்த வேண்டியது. ஆனால், தீபாவளி பண்டிகையை கணக்கில் கொண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாத்ததில் அகவிலைப்படி அறிவிக்கப்படும்.

இது அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட வழிவகுக்கும். அந்த வகையில், மத்திய அரசு ஜூலை மாதம் அறிவிக்கப்பட வேண்டிய அகவிலைப்படியை அக்டோபர் 16ஆம் தேதி அறிவித்தது. 

மகிந்த அறிவிப்பில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது இதற்கு முன்னதாக 50 சதவீதமாக இருந்த அகவிலைப்படி, 53 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், தமிழக அரசு ஊழியர்களுக்கு 50 சதவீதமாக இருந்த அகவிலைப்படி உயர்வு 53 சதவீதமாக உயர்த்தி வழங்கி முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm mk stalin announce increase discount rate


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->