பிறந்தநாள் விழா: கருணாநிதி, அண்ணா நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரின் பிறந்தநாளுக்கு கட்சித் தொண்டர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

அவருடன் சேர்ந்து அமைச்சர்களும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். அதுமட்டுமல்லாமல் கருணாநிதி நினைவிடத்தில், 'மார்ச் 1 திராவிட பொன்நாள்' என்றும் "முயற்சி... முயற்சி... முயற்சி... அதுதான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்" என்றும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. 

இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்திற்கு வந்தார். அங்கு அவருக்கு நூற்றுக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அங்குள்ள பெரியார் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM mk stalin respect in anna and karunanithi memorial place


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->