#BREAKING || 12 மணி நேர வேலை மசோதா வாபஸ்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் தொழிலாளர் தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை சிந்தாரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள மே தின நினைவுச் சின்னத்திற்கு சிவப்பு சட்டை அணிந்து சென்ற முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 

அவருடன் திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் நிர்வாகிகள் அமைச்சர்களும் மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து மே தினத்தை ஒட்டி முதல்வர் மு.க ஸ்டாலின் உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

அதன் பிறகு தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின் "தொழிலாளர் தோழர்கள் அனைவருக்கும் எனது மே தின நல்வாழ்த்துக்கள். தொழிலாளர்களை வாழ்த்தக்கூடிய அரசாங்கம் மட்டும் இல்லாமல் அவர்களை வாழ வைக்க கூடிய அரசாங்கம் திமுக அரசு செயல்பட்டு வருகிறது.

திமுக அரசு கொண்டுவந்த 12 மணி நேர வேலை சட்டத்தை திமுக தொழிற்சங்கமே எதிர்த்ததை பாராட்டுகிறேன். திமுக ஜனநாயக இயக்கம் என்பதற்கு இதுவே ஒரு எடுத்துக்காட்டு. விட்டுக் கொடுப்பதை அவமானமாக நினைக்கவில்லை, பெருமையாகவே நினைக்கிறேன். 12 மணி நேரம் வேலை மசோதாவை திரும்ப பெறுவதாக கூறிய பின்னரும் சிலர் அவதூறு பரப்புகின்றனர். சட்ட மசோதா திரும்ப பெறப்பட்டது பற்றி அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் செய்தி குறிப்பு வாயிலாக தெரிவிக்கப்படும்" என முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM MKStalin announced 12hour work bill will be withdrawn


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->