எதிர்பாராத விபத்து! ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு - வேதனையில் முதல்வர் ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


சென்னை: மணலி, எண்ணூர் விரைவுச்சாலை அருகே விபத்தில் உயிரிழந்த எண்ணூர் போக்குவரத்துக் காவலர் லக்ஷ்மணனின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சென்னை, எண்ணூர் காவல் நிலையத்தில், போக்குவரத்துப் காவலராகப் பணியாற்றிவந்தவர் லக்ஷ்மணன் (வயது 37).

இன்று (05.10.2024) காலை சுமார் 6.00 மணியளவில் அம்பத்தூரில் நடைபெறவிருந்த காவல்துறை பயிற்சி அணிவகுப்பில் கலந்துகொள்வதற்காக லக்ஷ்மணன் தனது இருசக்கர வாகனத்தில் சென்னை, மணலி, எண்ணூர் விரைவுச் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்றுகொண்டிருந்த கிரேன் மீது மோதிய விபத்தில், பலத்த காயம் ஏற்பட்டு உடனடியாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், இன்று காலை 8.00 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தாக முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், போக்குவரத்துக் காவலர் லக்ஷ்மணன் அவர்களின் உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

லக்ஷமணன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டு உள்ளதாகவும் முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM MKStalin Condolence Traffic Police Lakshman Death


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->