தமிழகத்தையே அதிர வைத்த கள்ளச்சாராய விவகாரம்.. சிபிசிஐடி விசாரணைக்கு முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவு..! - Seithipunal
Seithipunal


கடந்த மூன்று நாட்களாக தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட மரணங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் மரக்காணம் அருகே வம்பாமேடு பகுதியைச் சேர்ந்தவர்கள் கள்ளச்சாராயம் குடித்ததில் தற்போது வரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 50க்கும் மேற்பட்ட நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோன்று செங்கல்பட்டு மாவட்டம் பேரம்பாக்கத்தில் போலி மது அருந்திய 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களை முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கள்ளச்சாராயத்தால் தற்போது வரை 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த வழக்குகளை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் "கள்ளச்சாராய மரணங்கள் என்னும் துயரச் செய்தி வந்ததும், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு விரைந்தேன். இதற்குக் காரணமானவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கடமை தவறிய காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இனி இப்படி ஒரு சம்பவம் நிகழக் கூடாது என ஆய்வுக் கூட்டத்தில் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளேன். இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.

கள்ளச்சாராயம் குடித்ததால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் உரிய சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்களிடம் அறிவுறுத்தியுள்ளேன். கள்ளச்சாராயம் எனும் தீமையை யாரும் நெருங்க வேண்டாம் எனப் பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறேன். கள்ளச்சாராயத்தை ஒழிக்க அரசு இரும்புக் கரம் கொண்டு செயலாற்றும்" என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM MKStalin ordered CBCID to investigate counterfeit liquor cases


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->