கோரமண்டல் ரயில் விபத்து.. உறவினர்கள் ஒடிசா செல்ல சிறப்பு ரயில்.. முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு..!!
Cm MKStalin said special train arranged to odisha
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவிலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா ரயில் நிலையம் அருகே சென்ற கொண்டிருக்கும் பொழுது சரக்கு ரயிலுடன் மோதியதில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 10 பெட்டிகள் வரை தடம் புரண்டது.
இந்த ரயில் விபத்தில் தற்போது வரை 288 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 1000க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தமிழகத்தைச் சேர்ந்த 35 பேர் பலியாகி உள்ளதாக வருவாய்த்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் துவங்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை மற்றும் தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது "ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களின் உறவினர்கள் ஒடிசா செல்ல சிறப்பு ரயில் இயக்கம் இயக்கப்படும். சென்னை, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று மாலை 6.30 மணியளவில் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒடிசா செல்லும் உறவினர்கள் திரும்பி சென்னை வருவதற்கும் சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உதவி சேவை மையத்தை தொடர்பு கொண்டு சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்" என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
English Summary
Cm MKStalin said special train arranged to odisha