சென்னை மக்களே நற்செய்தி... பிப்.15ல் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய திறப்பு விழா..!! - Seithipunal
Seithipunal


சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தை அடுத்து மிகப்பெரிய பேருந்து நிலையம் கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை அடுத்த வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் 88 ஏக்கரில் ரூ.394 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பேருந்து நிலையம் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பொங்கலுக்கு முன்பே திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்பொழுது திறப்பு விழா தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி வரும் பிப்ரவரி 15ஆம் தேதி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் திறப்பு விழா நடைபெற உள்ளது என சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் அறிவித்துள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த பேருந்து நிலையம் திறக்கப்பட்டால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் கூட்ட நெரிசல் பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விழா காலங்களில் கூட்ட நெரிசலால் அவதிப்படும் தென் மாவட்ட பயணிகள் நிம்மதி அடைவதுடன் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சென்னை மக்களும் நிம்மதி அடைவார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM MKStalin will inaugurate kilambakkam Bus Stand on Feb15


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->