சாலையோரம் கடை, மீனவ, கடைகளில், சிறு தொழில், நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ரூ.1000 உரிமை தொகை - பட்டியலை வெளியிட்ட முதலவர் ஸ்டாலின்!
CM STALIN ANNOUNCE URIMA THOKAI RS 1000
மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்து பேசியதாவது, "தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத பல உன்னதமான திட்டங்களையும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டின் மகத்தமான திட்டமான மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
* மீனவ பெண்கள், சாலையோரம் கடை வைத்திருக்கும் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்.
* கடைகளில் பணிபுரியும் பெண்கள், சிறு தொழில் உள்ளிட்ட நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும்.
* ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் பணியாற்றும் மகளிருக்கும் இந்த ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும்.
இப்படியாக தமிழகத்தில் ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்பட உள்ளது. இது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.
பெண்களுக்கான சமூக பொருளாதாரத்தை மீட்க எவ்வளவோ தலைவர்கள் வந்தாலும் பெரியாரின் சுயமரியாதை இயக்கமே பெண் விடுதலைக்கு பாதை அமைத்தது.
கிராம பொருளாதாரத்தை சுமப்பதாக பெண்கள் இருக்கிறார்கள் என்பதை மறக்க முடியாது. ஒரு ஆணுடைய வெற்றிக்காகவும், குழந்தைகளின் கல்வி, சமூகத்திற்காகவும் எத்தனை மணி நேரங்கள் அவர்கள் உழைத்திருப்பார்கள்..? அவர்களுக்கான ஊதியம்தான் இது.
ஆண்கள் அங்கீகரித்தால் பெண்களுக்கான சமூக உரிமை வழங்கிடும் நிலை உருவாகும் என இந்த அரசு நம்புகிறது. பல்வேறு வகைகளில் விலைமதிப்பில்லாத உழைப்பை வழங்கும் பெண்கள் இந்தத் திட்டத்தால் பயன்பெறுவார்கள். மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
English Summary
CM STALIN ANNOUNCE URIMA THOKAI RS 1000