''தோல்வி'' விரக்தியில் அ.தி.மு.க... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கு.!
CM Stalin says ADMK frustration failure
தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தை ஒத்திவைத்து கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து விவாதம் நடத்த கோரி அ.தி.மு.க உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து சபாநாயகர் உத்தரவை அடுத்து அவை காவலர்கள் அ.தி.மு.கவினரை சபையில் இருந்து வெளியேற்றி இன்று ஒரு நாள் அதிமுகவினருக்கு தடை விதிக்கப்பட்டது.
இதன் பிறகு சட்டசபையில் தேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவை கூடியதும் தேவையற்ற பிரச்சனைகளை அ.தி.மு.கவினர் கிளப்புகின்றனர்.
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக கடந்த 20ஆம் தேதி சபையில் விளக்கம் அளிக்கப்பட்டது. மீண்டும் என திட்டமிட்டு கலவரத்தை ஏற்படுத்த அ.தி.மு.கவினர் முயற்சி செய்கின்றனர்.
மீண்டும் மீண்டும் கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் அ.தி.மு.கவினர் செயல்படுகின்றனர். மக்களவை தேர்தல் தோல்வியால் அ.தி.மு.க விரக்தியில் செயல்படுகிறது.
கள்ளக்குறிச்சி சம்பவத்தின் உண்மையை அறிய நீதியரசர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் இழப்பீடுகள் வழங்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டம் செய்ய எல்லா கட்சிகளுக்கும் இடமும் உரிமையும் உள்ளது.
அரசு நியாயமான ஆர்ப்பாட்டத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கும். இந்த விவகாரத்தில் சபாநாயகர் தான் முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
English Summary
CM Stalin says ADMK frustration failure