மக்களை புறக்கணிக்கும் ஸ்டாலின்! அவரது கடமையை செய்யவேண்டும்! விளாசிய ஜிகே வாசன்! - Seithipunal
Seithipunal


நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 22ஆம் தேதி பாராளுமன்றத்தில் மழை கால கூட்டத்தொடர் தொடங்கியது. அதனையடுத்து நேற்று 2024-25 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு ஓட்டு மொத்தமாக புறக்கணிக்கப்பட்டு இருப்பதை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டித்து வருகின்றனர். இந்தநிலையில் தமிழக முதலமைச்சர் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிப்பு என்று கூறியது ஏற்புடையதல்ல என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் டெல்லியில் நடைபெற இருக்கும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கெடுக்காமல் புறக்கணிப்பதாக அறிவித்திருப்பது வாக்களித்த மக்களை புறக்கணிப்பது போன்றது. முதலமைச்சர் என்ற முறையில் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்று தமிழ்நாட்டிற்கான நிதி தேவையை கேட்பது அவரது கடமை என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CM Stalin to attend Niti Aayog meeting gk vasan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->