ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் - முதல்வர் ஸ்டாலின் கண்டனம்! - Seithipunal
Seithipunal


பிபிசி அலுவலக சோதனைக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரின் டிவிட்டர் செய்திக்குறிப்பில், "எந்தவொரு துடிப்பான ஜனநாயகத்துக்கும், வெளிப்படைத் தன்மையோடும் சுதந்திரமாகவும் செயல்படும் அமைப்புகள் இன்றியமையாதவை.

அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமான வரித்துறை உள்ளிட்ட  அமைப்புகள் அரசியல் கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றன.

ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, இந்திய ஜனநாயகத்தையும், ஊடகச் சுதந்திரத்தையும் பாழடித்து வருபவர்களுக்கு எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் தக்க பாடத்தை புகட்டுவார்கள்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cmstalin bbc dmk incometax Raid


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->