சிக்கன் பிரியாணியில் கிடந்த கரப்பான்பூச்சி.. அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் ..! - Seithipunal
Seithipunal


சிக்கன் பிரியாணி கரப்பான் பூச்சி  இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் உள்ள 5 ஸ்டார் பிரியாணி சென்டர் நேத்தம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி என்பவர் அவரது மனைவியுடன் பிரியாணி சாப்பிட வந்துள்ளார். அப்போது அசைவ உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்.

அப்போது மூர்த்தி சாப்பிட்ட சிக்கன் பிரியாணியில் கரப்பான் பூச்சி கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்சியடைந்த அவர் மேலாளரிடம் கேட்டுள்ளார். ஆனால், அவர் சரிவர பதிலளிக்காததால் உணவுகளுக்கு பில் கொடுத்துவிட்டு இதுகுறித்து ஆரணி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தார். 

ஆனால், இதுவரை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதே உணவகத்தில் ஏற்கனவே தந்தூரி பிரியாணி சாப்பிட்ட 12ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த நிலையில், தரமற்ற உணவுகளை தொடர்ந்து வழங்கி வரும் இந்த  உணவகம் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cockroach founded in briyani


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->