எல்லா பிரச்சனைகளுக்கும் அறிக்கை கொடுக்கும் முதல்வர் இதைக் கண்டுகொல்லாதது ஏன்? - வானதி சீனிவாசன் பேச்சு.! - Seithipunal
Seithipunal


கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து காவல் துறையினர் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே என்.ஐ.ஏ. அதிகாரிகள் தானாகவே முன்வந்து இதுகுறித்த விசாரணையில் ஈடுபட்டு, காவல்துறை அதிகாரிகளிடம் இதுதொடர்பான தகவல்களைப் பெறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கோவையில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்ததாவது, "தமிழக காவல் துறையும் தமிழக முதல்வரும் இந்த விசாரணையைத் தேசியப் புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க வேண்டும்.

கோவையில் இவ்வளவு பெரிய அச்சுறுத்தல் உள்ளாகி இருக்கிறது. இதற்கு முன்பாகவே மிகப் பெரிய குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்ட மாநகரம். '98 குண்டுவெடிப்பிற்கு பிறகும் கூட இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ், பிஜேபியின் பல்வேறு தலைவர்களை நாங்கள் இந்த மண்ணில் பலி கொடுத்திருக்கிறோம். இதுபோன்ற செயல்கள் நடந்த இந்த மண்ணை தமிழகத்தின் முதல்வர் வந்து பார்க்காதது கூட மட்டுமல்லாமல், இதைப் பற்றி பேசாததும் மிகக் கடுமையான கண்டனத்திற்கு உரியது.

எல்லா பிரச்சனைகளுக்கும் அறிக்கை கொடுக்கும் முதலமைச்சர், தங்கள் அமைச்சர்கள் மூலமாக பதிலளிக்கும் முதலமைச்சர் இதைப் பற்றி ஏன் பேச மறுக்கிறார். அதேபோல், உளவுத்துறை முற்றிலும் செயலிழந்து இருக்கிறது என்பதை இந்தச் சம்பவங்கள் காட்டுகின்றது.

75 கிலோ வெடிமருந்தை அந்த சிசிடிவி காட்சிகளில் பார்க்கின்ற போது மனம் பதறுகிறது. தீபாவளி நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இருக்கும் இடத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் இந்த மாதிரியான செயல் நடைபெற்று இருக்கிரது. இது ஏதோ தனிப்பட்ட சம்பவம் கிடையாது. 

 இந்த விசாரணையை தமிழக காவல்துறையும் தமிழக முதல்வரும் தேசியப் புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை ஏற்கனவே தேசியப் புலனாய்வு முகமை விசாரணை செய்து இருக்கிறது.

சர்வதேச அளவில் இவர்களுடைய தொடர்புகள் இருந்து கொண்டிருக்கிறது என்பதை கோவை மாநகர காவல்துறை ஆணையர் ஒத்துக்கொள்கிறார். இப்படிப்பட்ட சூழலில் தமிழக காவல்துறை மட்டுமே இதில் விசாரணை நடத்தி அதில் நிறைவான முடிவினை பெற முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coimbatore car acident vanathi seenivasan speech


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->