கோவை : பிற்படுத்தப் பட்டோருக்கு தொழில் தொடங்க கடனுதவி.. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட நிபந்தனைகள்..!! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு தொழில் தொடங்க தனி நபர் கடன் மற்றும் குழுக் கடன் வழங்க தமிழ்நாடு பிறப்படுத்தப் பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் கடனுதவி செய்து வருகிறது. 

இதில் பிற்படுத்தப் பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த பயனாளிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 30 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேலும், 60 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். 

ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே தனி நபர் கடன் திட்டத்தின் கீழ் வணிகம், விவசாயம், அல்லது அதை சார்ந்த தொழில்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் மரபு வழி சார்ந்த தொழில்களுக்கு ரூ. 15 லட்சம் கடனாக வழங்கப்படும். 

மேலும் குழுக் கடனுக்கு குழு தொடங்கி ஆறு மாதம் பூர்த்தி செய்யப்பட்டு இருக்க வேண்டும். ஒரு குழுவில் அதிகபட்சம் 20 பேர் வரை இருக்கலாம். மேலும் இருபாலர் சுய உதவிக் குழுவிற்கும் இந்த கடன் வழங்கப்படும். 

மேலும் கறவை மாடுகள் வாங்கவும் ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 60 ஆயிரம் வரை கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு கடனுதவி செய்யப்படும். இதற்கான விண்ணப்பங்களை WWW.tabcedco.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம். 

மேலும் குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், சாதி, வருமானம், பிறப்பிடச் சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் வங்கிகள் பிற ஆவண நகல்களுடன் இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், கூட்டுறவு வங்கிகளில் சமர்ப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Coimbatore Collector Announced Conditions For Loan Assisstance for BC


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->