கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1000 உதவித்தொகை.. இதுவரை 93,000 மாணவிகள் சேர்ப்பு.! - Seithipunal
Seithipunal


மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதித் திட்டத்தில் இதுவரை 93 ஆயிரம் மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

தமிழக அரசின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் உயர்கல்வி உறுதி திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. 

அந்த வகையில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள் கல்லூரி, பாலிடெக்னிக் அல்லது ஐ.டி.ஐ.யில் சேர்ந்து படிக்கும்போது அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்த திட்டத்தில் இதுவரை 93 ஆயிரம் மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும் நடப்பு கல்வி ஆண்டில் இளநிலை முதலாம் ஆண்டில் சேரும் மாணவிகள் தனியாக விண்ணப்பிக்க வேண்டும் எனவும், புதிய பதிவுக்கான சேவை தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

College students monthly 1000 scholarship update


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->