பொங்கல் பண்டிகை - தமிழகத்தில் களைகட்ட போகும் பலூன் திருவிழா.! எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் தமிழக அரசின் சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி சர்வதேச பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் இந்த வருடம் 10-வது ஆண்டாக பலூன் திருவிழா நடத்தப்படுகிறது. 

இந்த முறை சென்னை, மதுரை, பொள்ளாச்சி உள்ளிட்ட மூன்று இடங்களில் பலூன் திருவிழா நடைபெறவுள்ளது. சென்னையை அடுத்த கோவளம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் வருகிற 10-ந் தேதி முதல் 12-ந் தேதி வரையிலும், பொள்ளாச்சி ஆச்சிபட்டியில் 14 முதல் 16-ந் தேதி வரையிலும், மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஜல்லிக்கட்டு அரங்கில் ஜனவரி 18, 19 உள்ளிட்ட தேதிகளிலும் பலூன் திருவிழா நடைபெறவுள்ளது.

இந்த பலூன் திருவிழா குறித்து சுற்றுலாத்துறை அதிகாரி தெரிவித்ததாவது:- மதுரையில் முதன்முறையாக பலூன் திருவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவில், இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரியா, பிரேசில், பெல்ஜியம், ஜப்பான், தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகளின் ஹாட் ஏர் பலூன்கள் பறக்க விடப்படவுள்ளன. 

இதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து ஹாட் ஏர் பலூன் பைலட்டுகள் தமிழகம் வந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல், மிக்கி மவுஸ், டைனோசர் உள்பட பல்வேறு வடிவங்களிலும், தனித்துவமான வண்ணங்களிலும் பலூன்கள் பறக்க விடப்படஉள்ளது" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coming 10th balloon festival start in tamilnadu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->