மறைந்த நடிகர் விஜயகாந்த் படத்திறப்பு விழா - வெளியானது அதிகாரப்பூரவ அறிவிப்பு.!
coming 24th vijayakant photo launch function
தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த மாதம் 28-ந் தேதி உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவரது உடல் சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் ஊர்வலமாகக் கொண்டு வந்து கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலக வளாகத்திலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது, அவரது நினைவிடத்திற்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என்று ஏராளமானோர் தினமும் வந்து அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். இந்த நிலையில், மறைந்த கேப்டன் விஜயகாந்த்தின் படத்திறப்பு விழா வருகிற 24-ம் தேதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேமுதிக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத்தலைவர், தேசிய புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்தில் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி வருகிற (24.01.2024) புதன்கிழமை மாலை 4 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.
இந்த விழாவில், தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
coming 24th vijayakant photo launch function