அரசு பேருந்தில் ஐ.டி. பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள நடத்துனர்; நெல்லையில் அதிர்ச்சி..!
Conductor sexually harassing a female employee on a government bus
கோவையில் இருந்து அரசு பேருந்து ஒன்றில் ஐ .டி. நிறுவன பெண் ஊழியர் ஒருவர் நேற்று நெல்லைக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பேருந்தில் நடத்துனராக இருந்த மகாலிங்கம் என்பவர் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அந்த பெண் செல்போன் மூலம் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து நெல்லை புதிய பேருந்து நிலையத்திற்கு வந்த பெண்ணின் உறவினர்கள், நடத்துனர் மகாலிங்கத்தை பிடித்து புறக்காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்ததுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக புறக்காவல் நிலைய போலீசார், மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து, நடத்துனர் மகாலிங்கத்தை கைது செய்துள்ளனர். ஒரு அரசு பேருந்து நடத்துனர் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Conductor sexually harassing a female employee on a government bus