வியாசர்பாடி பகுதியில் முன்விரோதம் காரணமாக தகராறு! 5 பெண்கள் கைது! - Seithipunal
Seithipunal


பெரம்பூர் வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகர், 62வது பிளாக் பகுதியில் வசிப்பவரான ராஜேஸ்வரி மற்றும் அவரது மகன் சிலம்பரசன், வியாசர்பாடி ஜே.ஜே.ஆர்.நகரை சேர்ந்த சந்தோஷ்குமார் மற்றும் அவரது குழுவிடையே கடந்த மாதம் 24-ம் தேதி கடுமையான தகராறு ஏற்பட்டது. இந்த தாக்குதல் போக்கில் இரு தரப்பினருக்கும் கற்கள் மற்றும் கட்டைகளால் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

இதையடுத்து, எம்.கே.பி.நகர் இன்ஸ்பெக்டர் பென்சாம் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிலம்பரசன், அவரது தாய் ராஜேஸ்வரி மற்றும் தனுஷ் ஆகிய மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில், முன்னதாக தலைமறைவாக இருந்த வியாசர்பாடி சாமந்திப்பூ காலனியைச் சேர்ந்த ஷாலினி (25), பூங்கோதை (52), செல்வி (53), உமையாள் (37), ஷோபனா (34) ஆகிய 5 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Conflict in Vyasarpadi area due to animosity 5 women arrested


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->