ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு - காங்கிரஸ் நிர்வாகி கைது.! - Seithipunal
Seithipunal


பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5-ம் தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, திருவேங்கடம் உட்பட 21 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். 

இவர்களில், திருவேங்கடம் என்பவர் போலீஸாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். இதனிடையே ஆம்ஸ்ட்ராங் கொலைக்காக ரூ.1 கோடி வரை பணம் கைமாறிய விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. கொலையாளிகள் மற்றும் பணத்தை கைமாற்றியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்இந்தச் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டு பணம் மற்றும் சட்ட உதவி செய்தவர்கள் யார்? என்பதை கண்டறிய புலனாய்வு முடுக்கி விடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் வியாசர்பாடியைச் சேர்ந்த அஸ்வத்தாமன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதனால், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், அஸ்வத்தாமனின் தந்தை நாகேந்திரனின் பெயரும் குற்ற எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளது. ஆயுள் தண்டனைக் கைதியாக வேலூர் சிறையில் உள்ள அவரை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்வதற்கான ஆணையை சிறை நிர்வாகத்திடம் போலீசார் வழங்கவுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congrass excuetive arrested amstrong murder case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->