சுமார் ஒரு ஏக்கரில் கஞ்சா.. நாசுக்காக பயிரிட்ட காங்கிரஸ் பிரமுகர்..!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின், கரூர் மாவட்டத்தில் உள்ள மாமரத்துப்பட்டி கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தை காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் குத்தகைக்கு எடுத்து சுமார் ஒரு ஏக்கரில் கஞ்ச பயிரிட்டு வளர்த்தவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கடவூர் வட்டார தலைவராக இருப்பவர் அருணாச்சலம் என்பவர், மாமரத்துப்பட்டியில் மூன்றரை ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் மஞ்சள், மரிக்கொழுந்து, சோளப்பயிர்களுடன் ஒன்னேகால் ஏக்கரில் ஊடுபயிராக கஞ்சா பயிரிட்டுள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்திருக்கிறது.

இதை தொடர்ந்து, அந்த பகுதியில் ஆய்வு செய்து கஞ்சா பயிரிட்டதை கண்டுபிடித்த போலீசார் தோட்டத்தொழிலாளி உள்ளிட்ட இருவரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.

இது குறித்து, மேலும் நால்வரை தேடி வரும் நிலையில், கரூர் மாவட்ட எஸ்.பி.,பாண்டியராஜன் தலைமையிலான போலீசார் கஞ்சா செடிகளை அழிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress member gowth kanja


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->