தனது தொகுதியில் தார் சாலை அமைக்கும் பணி..சபாநாயகர் தொடங்கி வைத்தார்.!
Construction of bituminous road in his constituency The Speaker inaugurates
புதுச்சேரி மாநிலம்மணவெளி சட்டமன்ற தொகுதியில் ரூ. 64.38 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிகளுக்கான பூமி பூஜையில் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாண்புமிகு சட்டப்பேரவை தலைவருமான திரு செல்வம் ஆர் அவர்கள் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி மாநிலம் நல்லவாடு கிராமத்தில் குட்டி ஆண்டவர் கோவிலில் இருந்து சுனாமி குடியிருப்பு வரை ரூபாய் 36.45 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்க மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் அவர்களின் முயற்சியில் சட்டமன்ற உறுப்பினர் திரு வி பி ராமலிங்கம் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் தார் சாலை அமைக்கும் பணி சட்டமன்ற உறுப்பினர் திரு வி ராமலிங்கம் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கொருக்குமேடு கிராமத்தில் விடுதி வீதி குப்புசாமி நகர் கணபதி நகர் ஆகிய பகுதிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு க. வெங்கடேசன் அவர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 8.03 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணி மற்றும் அதே கிராமத்தில் பாரதி நகர் பெருமாள் நகர் அம்மா நகர் கோகுலம் நகர் ஆகிய பகுதிகளில் சட்டப்பேரவை தலைவர் அவர்களின் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 19.85 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணி என மொத்தம் ரூபாய் 64.38 லட்சம் மதிப்பிலான பணிகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாண்புமிகு சட்டப்பேரவை தலைவருமான திரு செல்வம் ஆர் அவர்கள் அந்தந்த பகுதிகளுக்கு சென்று பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சிகளில் சட்டமன்ற உறுப்பினர் திரு வி பி ராமலிங்கம் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் திரு ரமேஷ் உதவி பொறியாளர் திரு நாகராஜ் இளநிலை பொறியாளர்கள் திருமதி சரஸ்வதி திரு அகிலன் பாஜக மாநில விவசாய அணி தலைவர் ராமு மாவட்ட தலைவர் சுகுமாரன் விவசாய அணி சக்திபாலன் கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார் சக்திவேல் தொகுதி பொறுப்பாளர் லட்சுமிகாந்தன் மாவட்ட துணை தலைவர் மணிகண்டன் நல்லவாடு கிராம பஞ்சாயத்தார்கள் மற்றும் கொருக்கமேடு பகுதியைச் சேர்ந்த சகாயராஜ் வாழுமுனி ஆனந்த் சித்தானந்தம் ஜெயரட்சகன் மற்றும் அந்தந்த பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
English Summary
Construction of bituminous road in his constituency The Speaker inaugurates