மக்களே உஷார்! பரோட்டா சாப்பிட்ட கட்டுமானத் தொழிலாளி பலி!!
Construction worker dies after eating parota
மார்த்தாண்டம் பகுதியில் பரோட்டா சாப்பிட்டு கொண்டிருந்தபோது பரோட்டா தொண்டையில் சிக்கி கட்டுமானத் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தனன் (40). இவர் அப்பகுதியில் கட்டுமான தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையின் நேற்று இரவு சாப்பிடுவதற்காக, அங்குள்ள தனியார் ஹோட்டலில் பரோட்டா வாங்கிக் கொண்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
வீட்டில் அமர்ந்து பரோட்டா சாப்பிட்டு கொண்டிருந்தபோது தொடர் விக்கல் ஏற்பட்டுள்ளது. அதனை அடுத்து தனது தாயிடம் தண்ணீர் கேட்டுள்ளார். அவர் தண்ணீர் எடுத்து வரும் முன்னே சுருண்டு விழுந்து மயங்கி உள்ளார். மகனின் நிலை கண்டு அதிர்ச்சி அடைந்த தாயார் கூச்சலிட்டுள்ளார்.
சத்தம் கேட்டு அங்குவந்த அக்கம் பக்கத்தினர் சாந்தனனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மார்த்தாண்டம் பகுதியில் பரோட்டா சாப்பிடும் போது தொண்டையில் சிக்கியதில் கட்டுமான தொழிலாளி உயிர் இழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Construction worker dies after eating parota