அனைத்து ரேஷன் கடைகள் மூலம் ஆதார் எண் இணைப்பு! வாக்கு சாவடிகளை மாற்றினால் தெரிவிக்க வேண்டும்! கலெக்டர் உத்தரவு! - Seithipunal
Seithipunal


அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் கருத்து கேட்பு கூட்டம்!

தேர்தல் ஆணையத்திற்கு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான சுருக்கத் திருத்தம் 2023 தொடர்பான பரிந்துரைகளை மேற்கொள்ள அனைத்து கட்சிகள் கூட்டம் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் "தர்மபுரி மாவட்டத்தை பொருத்தவரை 5 சட்டமன்ற தொகுதிகளில் 1479 வாக்குச்சாவடிகள், 860 வாக்குச்சாவடி மையங்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் புதிதாக பாகங்கள் அமைத்தல், வாக்குச்சாவடி இடமாற்றம், வாக்குச்சாறு வேறு கட்டிடத்திற்கு மாறுதல் மற்றும் வாக்குச்சாவடியின் பெயர் திருத்தம் செய்தல் தொடர்பான ஆலோசனைகள் வழங்கலாம். மேலும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் பிரதிநிதிகளின் கருத்துகளும் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலில் தாமாக முன்வந்து இணைக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆதார் எண் இணைப்பு 6பி படிவம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த படிவத்தினை பொதுமக்கள் பெற்று, பூர்த்தி செய்து மீண்டும் அந்த படிவங்களை ரேஷன் கடை பணியாளர்களிடமே வழங்கலாம். எனவே வாக்காளர்கள் இந்த வசதியினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அக்கூட்டத்தில் பேசினார்.

இந்த கூட்டத்தில் உதவி ஆட்சியர் சித்ரா விஜயன் மற்றும் விஸ்வநாதன், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பழனி தேவி, தேர்தல் தாசில்தார் சௌகத் அலி, துணை தாசில்தார்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Consultation meeting with recognized political party representatives


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->