தொடரும் அரசு பேருந்து விபத்துகள் : பஸ்களை பாதுகாப்பாக இயக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜிகே வாசன்!!
Continuous measures should be taken to run buses safely GK Vasan
கல்வி நிலையங்கள் பஸ்களை பாதுகாப்பாக இயக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே வாசன் கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழகத்தில் தொடர்ந்து அரசு பேருந்துகள், அரசு வாகனங்கள்,தனியார் வாகனங்கள் தொடர்ந்து விபத்துக்குள்ளாவது தொடர்கதையாக நடந்து வருகிறது. சமீப நாட்களாக வாகனங்களில் இருந்து டயர் தனியாக ஓடி விபத்துகள் ஏற்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் அரசு பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் அவ்வபோது விபத்துக்கள் நடைபெற்று உயிரிழப்புகள் ஏற்படுவது மிகவும் வேதனை அளிக்கிறது. குறிப்பாக அரசு பேருந்துகளில் மக்கள் பயணம் செய்யும்போது பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் பேருந்தை இயக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால் அரசு பேருந்துகளில் உள்ள குறைகளை சரிப்படுத்தப்படாததால்தான் விபத்துக்கள் தொடர்ந்து ஏற்படாதாக செய்திகள் தெரிவிக்கப்படுகின்றன.
அனைத்து வகையான பேருந்து ஓட்டுநர்களும் முறையாக சரியான விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும் அனைத்து வகையான பேருந்துகளும் இயக்கப்படும் பாதைகளில் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
போக்குவரத்தில் உள்ள விதிமுறைகள் மீறப்பட்டால் அதற்காக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வாகன ஓட்டிகளிடமும் பொது மக்களிடமும் போக்குவரத்தில் கவனமுடன் இருக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்திற்கு உத்தரவாதம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
English Summary
Continuous measures should be taken to run buses safely GK Vasan