#BREAKING || குன்னூர் அருகே., ராணுவ வீரர்களின் உடல்கள்களை எடுத்து செல்ல பாதுகாப்புக்கு சென்ற போலீசார் வாகனம் விபத்து.! - Seithipunal
Seithipunal


முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் உடல்கள் சாலை மார்க்கமாக கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர்க்கு எடுத்துச் செல்லப்படுகிறது. 

இந்தநிலையில், பாதுகாப்புக்கு சென்ற போலீஸ் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

கல்லாடு பகுதியில் இந்த வாகனங்கள் கடந்து இருந்தபொழுது, பாதுகாப்பு பணிக்காக திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த போலீசார் வாகனமொன்று பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தபோது. குன்னூர் அருகே பார்லி(இடம் சரியான தகவல் இல்லை) வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மலையின் மீது மோதி விபத்துக்குள்ளாகியது.

இதில், அந்த வாகனத்தில் பயணித்த 12 காவலர்களில் 7 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. தற்போது விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக நான்கு தனியார் ஆம்புலன்ஸ் மூலமாக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

ராணுவ வீரர்களின் உடல்கள்களை எடுத்து செல்ல பாதுகாப்புக்கு சென்ற போலீசார் வாகனம் விபத்துக்குள்ளானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

COONOOR POLICE VAN AACCIDENT


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->