கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள் கைக்குழந்தையுடன் உண்ணாவிரதம்!
corona during worked nurses protest
சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் இன்று கொரோனா பேரிடர் காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொரோனா பேரிடர் காலத்தில் 3000 செவிலியர்கள் தற்காலிக பணியில் அமர்த்தபட்டனர். அவர்களது பணிக்காலம் முடிந்தவுடன் அரசு கடந்த ஆண்டு பணியில் இருந்து அவர்களை விடுவித்தது.
இதனை கண்டித்து உச்ச நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட செவிலியர்கள் வழக்கு தொடர்ந்தனர். மேலும் செவிலியர்களுக்கு உரிய பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என கடந்த ஜூலை மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத அரசை கண்டித்து தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளது.
சங்கத்தின் மாநில தலைவி, துணை தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் தலைமையில் செவிலியர்கள் கைக்குழந்தையுடன் வந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
இரவு-பகல் என தொடர்ந்து 3 நாட்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 700க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மேலும் கைக்குழந்தைகளுடன் செவிலியர்கள் போராட்டம் நடத்துவது பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
English Summary
corona during worked nurses protest