ஊரடங்கு காலகட்டத்தில் பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் - தமிழக அரசு அரசாணை! - Seithipunal
Seithipunal


ஊரடங்கு காலகட்டத்தில் பணிக்கு வராத அரசு ஊழியர்களுக்கு, அந்த நாட்களையும் பணிக்காலமாக கருத அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

2021-ம் ஆண்டு மே 10-ந்தேதி முதல் ஜூலை 4-ந்தேதி வரை கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் அத்தியாவசிய பணிகளைத் தவிர பிற துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. 

இந்தநாட்களிலும் தங்களுக்கு ஊதியம்வழங்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், 2021-ம் ஆண்டு மே 10-ந்தேதி முதல் ஜூலை 4-ந்தேதி வரையிலான ஊரடங்கு காலகட்டத்தில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராத காலத்தை பணிக்காலமாக கருத அனுமதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

மேலும், அரசு ஊழியர் அல்லது அவரது குடும்பத்தினர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் அல்லது கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் வசித்திருந்தால், தனிமைப்படுத்தப்பட்ட காலத்தை சிறப்பு விடுப்பாக கருத தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Corona lock down govt Staff issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->