"மீண்டும் கொரோனா "...பயணிகளிடம் தீவிர பரிசோதனை!! - Seithipunal
Seithipunal


கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி ஏராளாமான உயிர்களையும் பலி வாங்கியது. மேலும் இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு உலகம் முழுவதிலும் அனைத்து விதமான போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.

இந்தியாவிலும் பெருமளவில் உயிரிழப்பு ஏற்பட்டதால் ஒரு வருடத்திற்கு மேலாக லாக் டவுன் அறிவிக்கப்பட்டு தொழில்கள் அனைத்தும் முடக்கப்பட்டதால் பெரும் பொருளாதார பாதிப்புகளும் ஏற்பட்டன. இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு இறுதியில் லாக் டவுன் படிப்படியாக குறைக்கப்பட்டு முழுமையாக நீக்கப்பட்டது.

உலகநாடுகளும் இயல்புக்குத் திரும்பிய நிலையில், தற்போது சிங்கப்பூரில் மீண்டும் கொரோனா பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு வாரத்தில் 5 நாட்கள் விமான சேவை நடைபெறுகிறது.

எனவே தற்போது கோவை விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து வரும் விமானப் பயணிகளிடம் காய்ச்சல் கண்டறியும் பரிசோதனை தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் தமிழக அரசு சார்பில் இன்னும் பிரத்தியேக தகவல் எதுவும் வரவில்லை. அப்படி தகவல் வந்தால் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் கோவை விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் மற்றும் சுகாதார பணிகள் துணை இயக்குனர் அருணா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Corona return passenger checking


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->