கனமழையால் பருத்தி சாகுபடி பாதிப்பு: உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் - ஜி.கே வாசன்!! - Seithipunal
Seithipunal


டெல்டா பகுதி பருத்தி விவசாயிகள் வேதனை. கனமழையால் பருத்தி சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. அந்த வகையில் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் அனேக இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது.

திருவாரூர்,நாகை, மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்து 45 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி செய்கின்றனர். தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக சுமார் 25,000 ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

 தமிழக அரசு டெல்டா மாவட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 25 ஆயிரம் ஏகர் பருதி சாகுபடிக்கு உரிய ஏற்பாடு தொகையை வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cotton crop affected compensation provided GK Vasan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->