தமிழக மீனவர்களின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!
court custody extend to tn fishermans
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோட்டைப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்குதளங்களிலிருந்து கடந்த 9-ம் தேதி 15 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மீனவர்களை கைது செய்தனர்.
அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றபத்திரிகை தாக்கல் செய்து யாழ்ப்பாணம் சிறையில் நீதிமன்ற காவலில் அடைத்தனர். இந்த நிலையில் மீனவர்களின் நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்ததையடுத்து 15 பேரும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி, மீனவர்கள் அனைவருக்கும் நவம்பர்11-ம் தேதி வரை காவலை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.
அதன் படி மீனவர்கள் 15 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டனர். இதன்மூலம் மீனவர்களின் நீதிமன்ற காவல் 3-வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
English Summary
court custody extend to tn fishermans