பெரும் சோகத்தில் தமிழகம்! குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் வஉசியின் கொள்ளுப்பேரனா?!  - Seithipunal
Seithipunal


2 நாட்களுக்கு முன்பு குற்றாலம் அருவியில் குளித்த அஸ்வின் என்ற சிறுவன் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தான். உயிரிழந்த இந்த சிறுவன் வஉசியின் கொள்ளுப்பேரன் என்பது தற்போது தெரிய வந்துள்ளது

கோடை விடுமுறையையொட்டி, தென்காசி மேலகரத்திலுள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்த நிலையில்,  மகன் ஆசைப்பட்டார் என்பதற்காக தென்காசி சென்றிருந்தபோது வெள்ளத்தில் மகனை பறிகொடுத்ததாக பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர். 

கடந்த வெள்ளிக்கிழமை தென்காசி மாவட்டம், பழையகுற்றாலம் அருவியில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட திருநெல்வேலியைச் சோ்ந்த சிறுவன் அஸ்வின் (வயது 17) உயிரிழந்தாா். தீயணைப்பு துறையினர் 3 மணி நேரம் போராடியும் சிறுவன் சடலமாகவே மீட்கப்பட்டு இருந்தார்.

இதனையடுத்து பழைய குற்றாலம், பேரருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றலா பயணிகள் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டு தற்போதுவரை நடைமுறையில் உள்ளது.

இந்த நிலையில் குற்றாலத்தில் உயிரிழந்த சிறுவன் கப்பலோட்டிய தமிழன் வஉ சிதம்பரம் பிள்ளை அவர்களின் கொள்ளுப்பேரன் என்ற தகவல் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிறுவன் அஷ்வினின் பெற்றோர் தெரிவிக்கையில், கோடை விடுமுறைக்கு தென்காசி வந்துள்ளனர். அப்போது தங்களது மகன் ஆசைப்பட்டான் என்பதற்காக குற்றாலம் சென்றதாகவும், அங்கு ஏற்பட்ட வெள்ளத்தில் மகனை பறிகொடுத்ததாகவும் பெற்றோர் வேதனை தெரிவித்துள்ளனர். 

மே 21 ஆம் தேதி வரை தென்காசி மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு, குற்றாலம் பேரருவி, பழையகுற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் குளிக்கத் தடைவிதித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Courtallam voc Grand son death


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->