ஆம்பூர் அருகே பயங்கரம் - விபத்தில் சிக்கி சி.ஆர்.பி.எப் வீரர்கள் படுகாயம்.!  - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் ஆவடி துணை ராணுவ பயிற்சி மையத்தைச் சேர்ந்த 71 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பயிற்சி முடித்து விட்டு இன்று ஆவடி பயிற்சி மையத்திற்கு திரும்பி வந்துக் கொண்டிருந்தனர். 

அப்போது, ஆம்பூரை அடுத்த செங்கிலிகுப்பம் பகுதியில் துணை ராணுவ வீரர்கள் ஓட்டி வந்த வாகனம், திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், 4 சி.ஆர்.பி.எப் வீரர்கள் படுகாயமடைந்தனர். 

மேலும், வாகனத்தை ஓட்டிச் சென்ற ரிஜோ மற்றும் சின்னதுரையின் கால் வாகனத்தின் இடிபாடுகளில் சிக்கி துண்டானது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு இருவரையும் லாரியின் இடிபாடுகளிலிருந்து மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, போலிஸார் இந்த விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

crbf soldiers injured accident in ambur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->