சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது குற்றவியல் வழக்கு! - Seithipunal
Seithipunal


சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் பாலகுருநாதர் மீது குற்றவியல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. துணைவேந்தர் ஜெகநாதனுக்கு எதிராக சேலம் 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த நிலையில், சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீதான குற்றவியல் வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. இதற்கிடையே சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில், தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி அடிப்படையில் 400க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், தங்களை  தங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கம் சார்பில், சென்னை தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும், பணி நிரந்தரம் கோரியும், பல்கலைக்கழகத்தில் நடந்து வரும் ஊழல், முறைகேடுகளை தடுக்க வலியுறுத்தியும் தொழிலாளர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Criminal case against Salem Periyar University Vice Chancellor


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->