அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் வெட்டிக்கொலை... உட்கட்சி பிரச்சனை காரணமா?
Cuddalore ADMK Ex councilor murder case
கடலூர், வண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் புஷ்பநாதன் (வயது 45) இவரது மனைவி மஞ்சுளா.இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.நகராட்சி முன்னாள் கவுன்சிலரான புஷ்பநாதன் அதிமுக மாவட்ட பிரதிநிதியாக இருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு 10:30 மணி அளவில் புஷ்பநாதன் புதுவண்டிபாளையம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவரை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த மர்ம நபர்கள் புஷ்பநாதனை வழிமறித்து தாக்க முயன்றனர்.
இதனால் பதறிப் போன அவர் இருசக்கர வாகனத்தை விட்டு கீழே இறங்கி மர்ம நபர்களிடமிருந்து தப்பிக்க முயன்றனர். அதற்குள் மர்ம நபர்கள் புஷ்பநாதனை மடக்கி அறிவாளால் நடுரோட்டில் சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதில் ரத்த வெள்ளத்தில் புஷ்பநாதன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று புஷ்பநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே புஷ்பநாதனின் உறவினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கடலூர் அரசு மருத்துவமனை எதிரே ஒன்று திரண்டனர்.
பின்னர் அவர்கள் புஷ்பநாதனை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் படுத்தி அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், உள்கட்சி பிரச்சனை காரணமாக புஷ்பநாதன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். மேலும் உயிரிழந்த புஷ்பநாதனுக்கும் அ.தி.மு.கவைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து புஷ்பராஜ் கொலை தொடர்பான வழக்கில் இரண்டு பேரை போலீசார் பிடித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Cuddalore ADMK Ex councilor murder case