கடலூர் | கரும்பு காட்டுக்குள் கத்தி கூச்சலிட்ட பெண்! லிப்ட் கொடுத்து அரங்கேறிய கொடூரம்! - Seithipunal
Seithipunal


கடலூர் : தனியாக நின்றுகொண்டிருந்த இளம்பெண்ணை, லிப்ட் கொடுப்பதாக பைக்கில் அழைத்து சென்று செல்போனில் படம் பிடித்த மொன்று பேர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர் அருகே பில்லாலி தொட்டி பகுதியை சேர்ந்த இளம்பெண் (34 வயது) ஒருவர், சம்பவம் நடந்த அன்று பண்ருட்டி அடுத்த ராசாப்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். 

உறவினரை பார்த்துவிட்டு கடலூர் செல்வதற்காக அந்த பகுதியில் உள்ள ஒரு பேருந்து நிறுத்தத்தில் காத்து கொண்டிருந்தார். அந்நேரம் இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், லிப்ட் தருவதாக கூறி இளம்பெண்ணை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். 

வாழப்பட்டு அருகே உள்ள கரும்புத்தோப்புக்குள் திடீரென்று அந்த இளைஞர் தனது இரு சக்கர வாகனத்தை திருப்பி சென்றுள்ளார்.  அங்கு ஏற்கனவே 2 இளைஞர்கள் நின்று கொண்டிருப்பதை பார்த்த இளம்பெண், மிரண்டு போய் செய்வதறியாது அதிர்ச்சியில்  ஆழ்ந்துள்ளார்.

3 இளைஞர்களும் சேர்ந்து இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று, அதனை செல்போனில் படம் பிடித்து உள்ளனர். இதனை அடுத்து அந்த இளம்பெண் கத்தி கூச்சலிடவே, 3 இளைஞர்களும் தப்பி ஓடினார்கள். 

தப்பித்துவந்த இளம்பெண் நெல்லிக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் ராசாபாளையம் பகுதியை சேர்ந்த விக்கி, அண்ணா நகர் வேலு உள்ளிட்ட 3 இளைஞர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore lady complaint Nellukuppam incident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->