கடலூர் மாவட்ட கிராம பகுதிகளுக்கு அரசு பேருந்து சேவை நிறுத்தம்! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாளில் 26 பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ள நிலையில், இன்று புவனகிரி அருகே அரசுப் பேருந்து மீது இன்று மர்ம நபர்கள் கல்வீசித் தாக்கிதல் நடத்தியுள்ளனர்.

இதில், பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாத்தப்பாடி கல்வீச்சு சம்பவம் தொடர்பாக கல்வீச்சு சம்பவம் தொடர்பான புகாரில் புவனகிரி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் கடலூரிலிருந்து கிராம பகுதிகளுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 

கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டத்தில் வளையமாதேவி உள்ளிட்ட கிராமங்களில் சுரங்க விரிவாக்கப் பணிகளை என்எல்சி இந்தியா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. 

இதற்காக கையகப்படுத்திய நிலங்களில் பரவனாறு மாற்று வாய்க்கால் அமைக்கும் பணியில் என்எல்சி இந்தியா நிறுவனம் கடந்த 2 நாள்களாக ஈடுபட்டு வந்தது. அப்போது விளைநிலங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிா்கள் அழிக்கப்பட்டன. 

இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, பொதுமக்கள், விவசாயிகள், பாட்டாளி மக்கள் கட்சியினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், கடலூர் மாவட்டம் ஒரு பரபரப்பான சூழ்நிலையில் இருந்து வருகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cuddalore local govt bus stopped after 6 pm


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->